சற்றுமுன்

தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அனிருத்


தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். கிட்டத்தட்ட 15 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இவர், கையில் 5க்கும் மேற்பட்ட படங்களை வைத்திருக்கிறார். இதுவரை தமிழில் மட்டுமே இசையமைத்துள்ள தனுஷ், முதன்முறையாக தெலுங்கில் அறிமுகமாகப் போகிறார். பவன் கல்யாண் நடிப்பில் திரிவிக்ரம் ஸ்ரீவாஸ் இயக்கும் பெயரிடப்படாத படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ். அனிருத் இசையில் நடித்த தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் பாடியது போல, பவன் கல்யாணும் இந்தப் படத்தில் பாடப் போகிறாராம்

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.