சற்றுமுன்

க்ரைம் த்ரில்லர் படத்தில் சாய் பல்லவி நடிக்கும் ‘கரு’


ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா நடித்துள்ள ‘வனமகன்’, மே மாதம் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. இதற்கடுத்து, மலையாளத்தில் வெளியான ‘சார்லி’ படத்தை, தமிழில் ரீமேக் செய்யப்போவதாக அறிவித்தார். துல்கர் சல்மான் கேரக்டரில் மாதவனும், பார்வதி நாயர் கேரக்டரில் சாய் பல்லவியும் நடிப்பதாக இருந்தது. ஆனால், இந்தப் படம் தள்ளிப்போவதால், அதற்குள் க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கப் போகிறார். சாய் பல்லவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு, ‘கரு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘வனமகன்’ ரிலீஸுக்குப் பிறகு இந்தப் படத்தின் வேலைகள் தொடங்க உள்ளன. இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை முடித்தபின்னரே ‘சார்லி’ ரீமேக்கைத் தொடங்குகிறார் விஜய்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.