சற்றுமுன்

சேது படத்தின் இரண்டாம் பாகமா ‘ஸ்கெட்ச்?’


பாலா இயக்கத்தில் விக்ரம், அபிதா நடித்த படம் ‘சேது’. 1999ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம்தான், விக்ரமுக்குள் இருக்கும் நடிகனை வெளிச்சம் போட்டுக் காட்டியது. தற்போது ‘வாலு’ விஜய்சந்தர் இயக்கத்தில் ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். ‘சேது’ படத்தில் விக்ரம் நண்பனாக நடித்த ஸ்ரீமன், 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்.

அத்துடன், ‘சேது’ படப்பிடிப்பு நடந்த இடங்களிலேயே இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறதாம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ‘சேது’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் இருக்கலாம் என்கிறார்கள். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.