சற்றுமுன்

தாய்லாந்து ட்ரிப்பை கேன்சல் செய்த சிம்பு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. ரொம்பவே மெதுவாக ஷூட்டிங் நடைபெற்றுவரும் இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூலுக்காக தாய்லாந்து செல்ல முடிவெடுத்தது படக்குழு. ஸ்ரேயா, தமன்னா, சனா கான் என மூன்று நாயகிகள் நடிக்கும் இந்தப் படத்தில், சனா கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட இருந்தன. ஆனால், அங்கு சென்று படப்பிடிப்பு நடத்துவதற்கும் அனுமதி கிடைக்கவில்லையாம். எனவே, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு படமாக்க இருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.