சற்றுமுன்

அரசு மருத்துவமனை ஊழியர் மீது நடவடிக்கை : ஜி.கே.வாசன்

சென்னை : அறவழியில் போராடிய அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்கு ஜி.கே.வாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 15 ஆண்டு காலமாக சுமார் 2,600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எய்ட்ஸ் குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். இவர்கள் தங்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை... அறவழியில் தமிழக அரசுக்கு முன் வைக்கின்றனர். இவ்வாறு கோரிக்கை வைத்த எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், ஊழியர்கள் மீது எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட
அலுவலகம் நடவடிக்கை எடுத்திருப்பது துரதிஷ்டவசமானது.

குறிப்பாக சங்க மாநில செயலாளரை பணி நீக்கம் செய்தது, மாநில தலைவருக்கான பணியிட மாறுதல் செய்தது, கடந்த மார்ச் 31ம் தேதி - 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த 11 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது, அதன் பிறகு இடைப்பட்ட காலத்தில் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் என 10 பேரை பணி நீக்கம் செய்தது.


பிறகு மார்ச் 2017 ல் 14 பேரை பணி நீக்கம் செய்தது. இதனால், பணியை இழந்த ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதாரம் இன்றி மிகவும் சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம்பள உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும், குழுக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஊழியர்கள் கடந்த 5 வருடத்திற்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Summary :GK Vasanthan has condemned the move to take action against government hospital staff who fought in the charity. DMK leader GK Vasan issued a statement yesterday: Over 2,600 employees have been advising about AIDS over the last 15 years in state hospitals and government primary health centers in Tamil Nadu

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.