சற்றுமுன்

“தேசிய விருதைவிட விஜய்தான் பெரிசு”

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘குஞ்சு தய்வம்’ படத்துக்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர் ஆதிஷ் பிரவின். இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஆதிஷ், “தேசிய விருதைவிட, விஜய்யைச் சந்திப்பதுதான் என்னுடைய வாழ்நாள் லட்சியம்” என்று கூறியிருக்கிறான். இந்தத் தகவல் விஜய்க்கு சொல்லப்பட, அட்லீ படத்தில் பிஸியாக இருந்ததால் உடனடியாக சந்திக்க முடியவில்லை. தற்போது படப்பிடிப்பு இல்லாததால், ஆதிஷை கேரளாவில் இருந்து சென்னைக்கு வரவழைத்திருக்கிறார் விஜய். ஒரு மணி நேரம் இருவரும் மலையாளத்தில் பேசியிருக்கிறார்கள். “உங்களைப் போல் பெரிய ஹீரோவாக வேண்டும்” என்று ஆதிஷ் சொல்ல, “திறமையும், உழைப்பும் இருந்தால் நிச்சயம் வருவாய்” என்று வாழ்த்தி அனுப்பியிருக்கிறார் விஜய்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.