சற்றுமுன்

தமன்னாவின் படம் கைவிடப்பட்டதா?


கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ‘குயின்’. பாக்ஸ் ஆபீஸில் பயங்கர கலெக்ஷனை அள்ளிய இந்தப் படம், தமிழில் ரீமேக் செய்யப்படுவதாக இருந்தது. நடிகை ரேவதி இயக்க, நடிகை சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுதுவதாக இருந்தது.

கங்கனா ரனாவத் கேரக்டரில் நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், தற்போது இந்தப் படம் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. காரணம், தமன்னா ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதுதான்.

சிம்பு ஜோடியாக ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’, விக்ரம் ஜோடியாக ‘ஸ்கெட்ச்’, விஷ்ணு விஷால் ஜோடியாக ‘பொன் ஒன்று கண்டேன்’, ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ஹிந்தி வெர்ஷன் என தமன்னாவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிவதால், ‘குயின்’ ரீமேக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.