சற்றுமுன்

தெலுங்கில் இயக்குநராகும் தனுஷ்

தனுஷ் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ‘பவர் பாண்டி’, இன்று திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்தை முன்பே பார்த்துவிட்ட ரஜினி, தனுஷைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அத்துடன், தன்னுடைய நண்பரான தெலுங்கு நடிகர் மோகன்பாபுவை வரவழைத்து, அவருக்கும் இந்தப் படத்தைப் போட்டுக் காட்டியிருக்கிறார். அவருக்கும் படம் பிடித்துவிட, ‘இந்தப் படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்யலாமே…’ என்று யோசனை சொன்ன ரஜினி, ராஜ்கிரண் வேடத்தில் மோகன்பாபு நடித்தால் நன்றாக இருக்கும் என்றாராம். மோகன்பாபுவும் அதற்கு சம்மதம் தெரிவிக்க, தனுஷே தெலுங்கிலும் இயக்கினால் நன்றாக இருக்கும் என யோசனை சொல்லியிருக்கிறார் ரஜினி. அவர் சொன்னால் மறுப்பேது? விரைவில் தெலுங்கு ரீமேக்கை ஆரம்பிக்கிறார் தனுஷ்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.