சற்றுமுன்

கலைஞர் விழாவில் மோடி மீது விமர்சனம் ஏன்? - தமிழிசை

மீண்டும் ஒரு சுதந்திர போராட்டமா? திமுக வின் சவாலை ஏற்கிறோம்
தனி மனித உரிமையை பறித்த அவசர நிலை பிரகடனம் போன்ற நிலைமை இப்போது எங்கே இருக்கிறது, சாதாரண குடி மகனும் நாட்டின் பிரதரையே விமர்சிக்க உரிமை இருக்கிறது. அன்று அவசர நிலை பிரகடனத்தால் பாதிக்கப்பட்ட ஸ்டாலின் அவர்களே அதை மறந்து பேசுவது வியப்பு, இதில் எங்கே சுதந்திர போராட்டம் வந்தது?
அன்று நடந்த சுதந்திர போராட்டத்தில் திமுக வின் பங்கு என்ன? திமுக வின் முன்னோடியான ஜஸ்டிஸ் கட்சி வெள்ளையருக்கு வெண்சாமரம் வீசியவர்கள் என்பதே வரலாறு, சுதந்திர தினத்திற்கு வாழ்த்து கூட செல்லாதவர்கள் திமுக வினர்.

இந்தியாவில் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜன்சி என்கிறார் உமர்அப்துல்லா. அன்று அவசர நிலைப்பிரகடனம்செய்த இந்திராபேரன்ராகுல் மேடையில் இருக்க ஷேக்அப்துல்லாபேரன்உரை நிகழ்த்தி உள்ளார். ஷேக் அப்துல்லாவை அவசர நிலை காலத்தில் கைது செய்து தமிழகத்தில் சிறை வைத்தவர் இந்திரா காந்தி.

பாஜக வை மதவாத கட்சி என்று விமர்சிக்கும் நீங்கள், உங்கள் பின்னால் அமர்ந்திருக்கும் முஸ்லீம் லீக் கட்சி என்ன மதசார்பற்ற கட்சியா? காஷ்மீரில் பாக்கிஸ்தான் கொடி ஏந்தும் போராளிகளுக்கு ஆதரவு அளிக்கும் உமர் அப்துல்லா கட்சியை உங்கள் மேடையில் ஏற்றி தேச பக்தர் மோடி யையும், பாஜக வையும் விமர்சிப்பது என்ன நியாயம்? மக்கள் புரிந்துகொள்வார்கள்.
தமிழகத்தில் சாதிக் கட்சிகளுக்கு கடந்த காலத்தில் துணை போன திமுக, சமூகநீதி என்று பேசுவது மக்களை ஏமாற்றும் செயல். சாதிய அடையாளங்களோடு ஆங்கங்கே மாவட்டங்களாக, வட்டங்களாக, வேட்பாளர்களாக சாதிவாரி அமைச்சர்களையும், தலைவர்களையும் உருவாக்கியதும் திமுக தானே.

முத்தமிழறிஞரின் விழாவில் ஒலித்த நிதிஷ் அவர்களின் இந்தி உரைக்கு கிடைத்த கை தட்டும் ஆரவாரமும். பகுத்தறிவு கடவுள் மறுப்பு பேசிக்கொண்டே ரகசியமாக கடவுள் வழிப்படும், பூஜை யாகங்கள் நடத்தும் திமுக வினர் போலவே. இந்தியை எதிர்த்தவர்களின் கூட்டத்தில் நிதிஷ் அவர்களின் இந்தி உரைக்கு கிடைத்த கைதட்டும், ஆரவார வரவேற்பும் திமுக வினர் பலர் இந்தியை ரகசியமாக படிப்பதையே உணர்த்துகிறது அல்லவா? இதிலும் நீங்கள் ஏமாற்றியது தமிழ் மக்களைத்த்தானே! - இதை கேட்டால் நங்கள் இந்தியை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம் என்று வார்த்தை ஜாலம் வழக்கம்போல். வட நாட்டு இந்தி பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் அதிகம் உள்ளம் நாடாளுமன்ற நிலைக்குழு நம்ம ஊர் ப. சிதம்பரம் தலைமையில் செய்த சிபாரிசு தான் இந்தி மொழி பயன்பாடு அதிகரிப்பு என்ற அரசின் கொள்கை முடிவு அதை நீங்கள் அழைத்து வந்த வட நாட்டு தலைவர்களிடம் சொல்லி உங்கள் ஆட்சியிலேயே தவிர்த்து இருக்கலாமே? மைல் கல்லில் இந்தி எழுத அரசாணைக்கு கையெழுத்திட்டது திமுக வின் மத்திய அமைச்சர் என்ற உண்மையை மறுக்க முடியுமா?

ஸ்டாலின் முதல்வராகி பூரண மதுவிலக்கு கொண்டு வர நிதிஷ் கோரிக்கை. தமிழகத்தில் இன்று வீதிக்கு வீதி மக்கள் போராடும் மதுவை கொண்டு வந்ததே திமுக தான் என்ற வரலாறு நிதிஷ் அவர்களுக்கு தெரியாது. ஏன் திமுக வினர் நடத்தும் மது ஆலைகளை முதலில் மூடட்டும் இன்றைக்கு தெருவுக்கு தெரு போராடும் தமிழ் தாய் குலங்கள் மீது உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்தால்.

திமுகவிற்கு ஆட்சி பெரிதல்ல கொள்கையே பெரிது என ஸ்டாலின் பேச்சு ஆம் கொள்ளையே பெரிது என்று தான் காதில் விழுந்தது விஞ்ஞானபூர்வ ஏன்னென்றால் ஊழல்வாதிகள் என்று சர்க்காரியா கமிஷனால் அடையாளம் காணப்பட்டவர்கள். ஊழல் ஒழிப்பு தினமான இன்று தமிழகத்தில் ஊழல் கட்சிகளின் ஒட்டுமொத்த குரல் ஒலிப்பு தான் கேட்டது. காமன்வெல்த் முதல் 2ஜி மாட்டுதீவனம், சிட்பண்டுவரை. அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்ற கொள்கை பதவி நாற்காலி வந்தவுடன் காற்றில் பறந்தது அல்லவா?
தேர்தல் வாக்குறுதி எதையுமே நிறைவேற்றவில்லையாம்!மக்கள்பணம் மக்களுக்கே என்று 3 ஆண்டு காலமாக ஊழலற்ற ஆட்சி நடத்தும் திரு. மோடி அவர்களை, 2ஜி ஊழல் பங்காளிகளின் அரசியல் வாரிசுகள் விமர்சிப்பதா?
வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் இந்திய முழுவதும் மற்ற மாநிலங்களில் மக்கள் வாக்குகளை எங்களுக்கு வாரி வழங்குகிறார்கள், இதுவே இங்கு தமிழகத்திலும் வரும் காலத்தில் தமிழக மக்களும் தாமரைக்கு வாக்களிப்பார்கள். தமிழகத்திற்கான அத்தனை வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றும்.

திரு மோடி அவர்கள் ஆட்சியில் தமிழகதிற்கு கிடைத்ததை நினைவுறுத்த : 85 ஆயிரம் கடனில் மூழ்கியிருந்த மின்வாரியம் மத்திய நிதி உதவியால் மீட்டெடுத்ததால் ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் கோடி வட்டி மீதப்பட்டது. தமிழகத்துக்கு 12 ஸ்மார்ட் சிட்டி 33 துனை நகரங்கள் பல ஆயிரம் கோடிகளில்அறிவிப்பு. தமிழகத்தை 5 முறை ஆண்ட திமுக கூவத்தில் படகு விடுவதாகச் சொல்லி ஏமாற்றியதை கருத்தில் கொண்டு தற்சமயம் கூவத்தை தூய்மையாக்கும் 400 கோடியில், 50லட்சம் விவசாயிகள் பயன்பெறும் அளவுக்கு பயிர் பாதுகாப்புத் திட்டம் தமிழகத்திற்கு அனுமதி. மீனவர்கள் அந்நிய எல்லையில் பிடிபட்டால் உயிருக்கு ஆபத்தின்றி உடனடி விடுதலை. ஆழ்கடல் மீன்பிடிக்க சுமார் 200 கோடி ஒதுக்கீடு. இரண்டு முறை பிரதமர் இலங்கை சென்று தமிழ் மக்களுடன் சந்திப்பு திறமான வெளியுறவுக் கொள்கையால் உலகத்தமிழர்களுக்கு பாதுகாப்பு உறுதியானது. மதுரவாயல் எண்ணூர் துறைமுக பறக்கும் மேம்பாலம் நிதி ஒதுக்கீடு. முத்ரா வங்கித்திட்டம் மூலம் சுமார் 7 கோடி பேருக்கு சுயவேலை வாய்ப்பு.

ஏழைகளின் இதய நோய்களிலிருந்து காப்பாற்ற சுமார் 1.5 லிருந்து 2 லட்சம் வரை சிலவு ஆகும் ஸ்டெண்ட்விலை கட்டுப்பாடின்றி அதிக விலையில் விற்பதை கட்டுப்பட 20ஆயிரம் விலையில் குறைக்கப்பட வேண்டியுள்ளது. கர்பிணிப் பெண்களுக்கு சிறப்பு கவனத்துடன் சிகிச்சை ஓய்வு கால விடுமுறை 6 மாதங்களாக அதிகரிப்பு. தூய்மை இந்தியா திட்டத்தில் லட்ச கணக்கில் கழிப்பறைகள் கட்டப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியர்கள் வெளிநாட்டில் பதுக்கிவைத்த கருப்பு பணம் ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் கொடுக்கும் அளவிற்கு பதுக்கப்பட்டுள்ளது என்று தான் மோடி அவர்கள் சொன்னார்கள். இதன் ஒரு நடவடிக்கையே ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு.
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு பயந்தே இன்றும் பலர் லண்டனுக்கு ஓடி ஒளிகிறார்கள் என்பது வெளிச்சம். இந்த தொடர் நடவடிக்கை வரும் காலத்தில் பலன் தரும்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதிய திமுக வும், வங்காளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்டிய திருனாமுல் காங்கிரஸ் வும் , தமிழகத்தில் மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் சுயநல கூட்டணி அமைத்து சென்ற முறை திமுக வை ஆட்சிக்கு வர விடாமல் செய்த கம்யூனிஸ்டுகள் மற்றும் சிலர் மோடி அரசுக்கு எதிராக அணி திரண்டு நின்றாலும் அவர்கள் சவாலை பாஜக எதிர்கொள்ளும், வரும் தேர்தலில் சாதனை புரியும்.

Why criticize Modi for kalnger festival - Tamilisai

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.