சற்றுமுன்

மதுரவாயல் சாலை துரிதமாக தொடங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்

“2008 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 18.3 கி.மீ. தூரத்திற்கு பறக்கும் சாலைத்திட்டத்திற்கு, கொள்கை ரீதியாக முடுவு எடுக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்திற...்கான மதிப்பு ரூ. 1,530 கோடியாகும்.

இத்திட்டத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் தொடர்ந்து சுமார் 1 வருடமாக நடைபெற்று 20 சதவீத பணிகள் முடிவடைந்தது. ஆனால் சென்னை கூவம் ஆறு இடையே நிறுவப்பட்ட தூண்களால் நீரோட்டம் பாதிக்கும் போன்ற சில காரணத்தை அப்போதைய தமிழக அரசு கூறியதால் இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இத்திட்டத்தினால் துறைமுக நுழைவு வாயில் எண் 10 க்கு அருகில் இருந்து துவங்கப்படும் புதியசாலை கோயம்பேடு வரை சென்று அதன் அருகில் உயர்த்தப்பட்ட சாலையாக அமைக்கப்பட்டு மெட்ரோ ரயில் பாதையை கடந்து மதுரவாயல் வரை சென்றடையும்.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னை துறைமுகத்தில் இருந்து செல்லும் சரக்கு வாகனங்கள் பறக்கும் சாலை வழியாக செல்லும் போது போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். குறிப்பாக சென்னை புறநகர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் நகரின் உள்ளே போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நேரடியாக சென்னை துறைமுகத்தை சென்றடையலாம். இதனால் இப்பகுதிகளில் வாகன ஓட்டிகள், பொது மக்கள் ஆகியோர் எளிதில் பயணம் செய்வதற்கும், வாகன எரிபொருள் சேமிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்கும் வழி வகுக்கும்.

நான் மத்திய கப்பல்துறை அமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று, விரைவில் முடிவடைந்து, செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்று அன்று முதல் இன்று வரை வலியுறுத்தி வருகிறேன்.

தற்போது இத்திட்டத்திற்கு தமிழக அரசு காலம் கடந்து சில மாறுதல்களுடன் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கான பணிகளுக்கு தடை ஏற்படாமல் இருந்திருந்தால் எப்போதே இத்திட்டம் முடிவடைந்திருக்கும். இத்திட்டத்தை காலம் கடந்து தற்போது மீண்டும் ஆரம்பிப்பதால் ஏற்படும் கோடிக்கணக்கான ரூபாய்க்கான கூடுதல் செலவையும் தவிர்த்திருக்கலாம்.

இருப்பினும் இனிமேலாவது மத்திய அரசு, மத்திய கப்பல்துறை அமைச்சகம், நெடுஞ்சாலைத்துறை, தமிழக அரசு ஆகியவை ஒருங்கிணைந்து இத்திட்டத்தினை உடனடியாக ஆய்வு செய்து, மீண்டும் பணிகளை தொடங்குவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இத்திட்டம் தொடர்வதற்கு வெளிப்படைத்தன்மையோடு டெண்டர் கோரப்பட்டு, மீண்டும் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு காலக்கெடுவிற்குள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வர அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் வாசன் வலியுறுத்தியுள்ளார்.


Tamil Nadu Congress Party leader GK Vasan has urged the tender for the Madurai-Madurai port for the road project and urged to start the work quickly.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.