சற்றுமுன்

நான் பெண்களைத் தவறாக காட்டவில்லை - ஆதிக் ரவிச்சந்திரன்.

‘திரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் இவர். முதல் படமே இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பியதாக இருந்ததால், படத்துக்கு எதிராகப் பெரும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும், பாக்ஸ் ஆபீஸில் நல்ல கலெக்ஷன். இருந்தாலும், இரண்டாவது படத்தில் நடிக்க எந்த நடிகரும் முன்வரவில்லை.

அந்த சமயத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஒரே ஆள், சிம்பு. அவரை வைத்து ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை எடுத்த ஆதிக், தற்போது அதை இரண்டு பாகங்களாக வெளியிட இருக்கிறார்.

“என்னுடைய முதல் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தது உண்மைதான். ஆனால், நான் பெண்களைத் தவறாகவோ, ஆபாசமாகவோ காட்டவில்லை. நான் ‘பிட்டு’ படம் எடுப்பவன் கிடையாது. எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் போல கமர்ஷியல் படங்கள் எடுக்கவே ஆசைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

Summary:Adi Ravichandran is the director of the film 'Trisha Illi Nayanthara'. He was the assistant director of SJ Surya. Since the first film was full of double meaning dialogues, there were great criticisms against the film. Simbu was the only one who agreed to act at that time. Adiak, who has taken him with the 'Love of the Uncertain One', is now releasing it in two parts.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.