சற்றுமுன்

25/05/2017 வரலாற்றில் இன்றய நிகழ்வுகள்

1659 - ரிச்சார்ட் குரொம்வெல் இங்கிலாந்தின் "ஆட்சிக் காவலர் பெருமகன்" (Lord Protector) பதவியைத் துறந்தார். பொதுநலவாய இங்கிலாந்தின் இரண்டாவது குறுகிய கால அரசு ஆரம்பமானது.
* 1810 - ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுனரை வெளியேற்றினார்கள்.
* 1812 - இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் கொல்லப்பட்டனர்.
* 1837 - கியூபெக்கில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
* 1865 - அலபாமாவில் "மொபைல்" என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
* 1895 - போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது.
* 1953 - நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.
* 1955 - ஐக்கிய அமெரிக்காவில் கன்சாஸ் மாநிலத்தில் "உடால்" என்ற சிறு நகரை இரவு நேர சூறாவளி தாக்கியதில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
* 1961 - அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அதிபர் ஜோன் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார்.
* 1963 - அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.
* 1966 - எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது.
* 1977 - ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.
* 1979 - ஐக்கிய அமெரிக்காவின் ட்சி-10 விமானம் ஒன்று சிக்காகோவில் விபத்துக்குள்லாகியதில் அதில் பயணித்த 271 பேரும் தரையில் இருவரும் கொல்லப்பட்டனர்.
* 1982 - போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலக் கப்பல் மூழ்கியது.
* 1985 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* 1997 - சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.
* 2000 - லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
* 2001 - அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
* 2002 - சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
* 2002 - மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்
* 1803 – ரால்ப் வால்டோ எமேர்சன், அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1882)
* 1855 – வி. கனகசபைப் பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1906)
* 1865 – பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1943)
* 1866 – மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1947)
* 1877 – சா. தர்மராசு சற்குணர், தமிழகத் தமிழறிஞர் (இ. 1952)
* 1878 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1953)
* 1886 – ராஷ் பிஹாரி போஸ், இந்தியப் போர்வீரர், செயற்பாட்டாளர் (இ. 1945)
* 1887 – பியட்ரல்சினாவின் பியோ, இத்தாலியப் புனிதர் (இ. 1968)
* 1899 – காஜி நஸ்ருல் இஸ்லாம், பங்காளக் கவிஞர், எழுத்தாளர், புல்லாங்குழல் கலைஞர் (இ. 1976)
* 1927 – பால் ஆலிவர், பிரித்தானியக் கட்டிடக்கலை வரலாற்றாளர்
* 1935 – ஆர். சிவலிங்கம், ஈழத்து எழுத்தாளர்
* 1936 – இரா. பாலகிருஷ்ணன், மலேசியத் தமிழ் வானொலி ஒலிபரப்பாளர், ஊடகவியலாளர்
* 1939 – கவுண்டமணி, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்
* 1939 – இயன் மெக்கெல்லன், ஆங்கிலேய நடிகர்
* 1953 – ஈவ் என்சுலர், அமெரிக்க தயாரிப்பாளர்
* 1954 – முரளி, இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 2009)
* 1958 – டோரதி ஸ்டிரெய்ட், அமெரிக்க எழுத்தாளர்
* 1972 – கரண் ஜோஹர், இந்திய நடிகர், இயக்குநர்
* 1933 – அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர்
* 1977 – கார்த்தி, தமிழகத் திரைப்பட நடிகர்

இறப்புகள்
* 986 – அல் சுஃபி, பாரசீக வானியலாளர் (பி. 903)
* 1085 – ஏழாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1020)
* 1595 – பிலிப்பு நேரி, இத்தாலிய மதகுரு, புனிதர் (பி. 1515)
* 2012 – திலீப், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
* 1919 – மேடம் சி. ஜே. வாக்கர், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1867)
* 1939 – பிராங்க் வாட்சன் டைசன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1868)
* 1983 – லிபியாவின் இத்ரிசு (பி. 1889)
* 1988 – ஏர்ணஸ்ட் ருஸ்கா, செருமானிய இயற்பியலாளர் (பி. 1906)
* 2005 – சுனில் தத், இந்திய நடிகர், இயக்குநர், அரசியல்வாதி (பி. 1929)
* 2013 – டி. எம். சௌந்தரராஜன் தமிழ்த் திரைப்படப் பாடகர், (பி. 1923)

சிறப்பு நாள்
* ஆப்பிரிக்க நாள் (ஆப்பிரிக்க ஒன்றியம்)
* ஆப்பிரிக்க விடுதலை நாள் (ஆப்பிரிக்க ஒன்றியம், ராஸ்தஃபாரை)
* விடுதலை நாள் (ஜோர்தான், 1946)
விடுதலை நாள் (லெபனான்)
* சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்

Events in history

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.