சற்றுமுன்

புல்லட் ஓட்டுவது எளிதாக இருக்கிறது” – ஜோதிகா


‘குற்றம் கடிதல்’ பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘மகளிர் மட்டும்’. இந்தப் படத்துக்காக, புல்லட் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டுள்ளார் ஜோதிகா. “கைனடிக் பைக் ஓட்டுவதைவிட, புல்லட் ஓட்டுவது கடினமாக இல்லை” என்கிற ஜோதிகாவுக்கு, சூர்யா தான் ஆரம்பத்தில் பைக் ஓட்ட கற்றுக் கொடுத்திருக்கிறார். முதன்முதலில் அடையார் சாலையில் நான்கைந்து தினங்களுக்கு பிராக்டிஸ் செய்திருக்கிறார் ஜோதிகா. பின்னர், சூர்யா பிஸியாகிவிட, பெண் பயிற்சியாளரைக் கொண்டு பழகியிருக்கிறார். “பைக் ஓட்டுவதை நீங்கள் மூன்றே நாட்களில் கற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த ட்ராஃபிக்கில் நீங்கள் தன்னம்பிக்கையுடன் ஓட்டுவதற்கு மூன்று மாதம் தேவைப்படும்” என பஞ்ச் தருகிறார் ஜோதிகா.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.