சற்றுமுன்

ஹைதராபாத்தில் படமாகும் ரஜினி பாட்டு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் படம் ‘2.0’. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசை, ஏ.ஆர்.ரஹ்மான். பிரமாண்டத்துக்குப் பெயர்போன ஷங்கர், 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார். இன்னும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்படாமல் இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு ஷங்கர் தெரிவித்திருந்தார். அந்தப் பாடலை, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதற்காக, கலை இயக்குநர் முத்துராஜ் தலைமையில் மிகப்பெரிய டீமே செட் போடும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்களாம்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.