சற்றுமுன்

ரகசிய சிகிச்சையில் நயன்தாரா?


ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துவரும் ‘வேலைக்காரன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் அது. ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்த நயன் ஸ்லிப்பாகி கீழே விழ, ஒட்டுமொத்த யூனிட்டும் பதறிப்போனது. ஆனால், வலியை முகத்தில் காட்டாத நயன், சைலண்டாக கேரவனுக்குள் போயிருக்கிறார். உதவியாளரை விட்டு இயக்குநரை அழைத்துவரச் சொன்னவர், ‘என்னால் வலியைத் தாங்க முடியவில்லை. இதிலிருந்து மீண்டுவர சில நாட்களானாலும் நீங்க பொறுத்துக்கணும்’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டார். மருத்துவமனையில் சேர்ந்தால் இல்லாததும் பொல்லாததும் சொல்வார்கள் என்பதால், புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றின் பிஸியோதெரபிஸ்ட்டை வீட்டுக்கே வரவழைத்து ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்களாம்

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.