சற்றுமுன்

அணுகுண்டை விட பெரிய ஆயுதம் - சிறு கதை


அமெரிக்கா முதன்முதலாக அணுகுண்டு தயாரித்து முடித்திருந்தது. அந்த முதல் அணுகுண்டு தயாரிப்பை ராபர்ட் ஒப்பன் ஹீமர் என்ற விஞ்ஞானி மேற்பார்வை செய்துவந்தார்

அணுகுண்டு தயாரித்து முடிந்ததும் அது தொடர்பான நுணுக்கத் தகவல்களை அளிப்பதற்காக ஒப்பன் ஹீமர் விஞ்ஞானிகள் மாநாடு ஒன்றைக் கூட்டியிருந்தார்.

அந்த மாநாட்டில் ஏராளமான விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர்.
ஹீமர் அணுகுண்டு தொடர்பான தொழில்நுடப்பத் தகவல்களையும், அதன் அழிவுச் சக்தியையும் விளக்கிப் பேசினார்.

அப்போது ஒரு விஞ்ஞானி எழுந்து, " இந்த அணுகுண்டையும் விஞ்சிய சக்தி வாய்ந்த வேறு ஆயுதம் உண்டா?" என்று ஒரு கேள்வி கேட்டார்
"நிச்சயமாக இருக்கிறது. அந்த ஆயுதம் மட்டும் பிரயோகிக்கப்பட்டால் அணுகுண்டு இருக்குமிடம் தெரியாமல் போய்விடும் " என்றார் ஹீமர்.
அது என்ன ஆயுதம்? என்று எல்லா விஞ்ஞானிகளும் பரப்பரப்புடன் கேட்டனர்.
அதற்கு விஞ்ஞானி ஒப்பன் ஹீமர் புன்னகை புரிந்தவாறே, " சமாதானம் தான் அந்த ஆயுதம். உலக நாடுகள் அனைத்தும் போர் வெறியைவிட்டு விட்டு சமாதான சக வாழ்வை மேற்கொள்ள முற்பட்டால் இந்த அணுகுண்டை குப்பையில்தான் வீசி எறிய வேண்டியிருக்கும் என்றார்....

tamil short story about somthing which is bigger or greater than nuclear bomb

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.