சற்றுமுன்

‘அண்ணாதுரை’க்கு வந்த ஆபத்து


சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவந்த படம் ‘அண்ணாதுரை’. ராதிகாவின் ‘ராடான்’ நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

சமீபத்தில், அந்த அலுவலகத்தில் ரெய்டு நடந்திருப்பதால், ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ‘காளி’ படத்தின் ஷூட்டிங்கில் மே மாதம் முதல் கலந்து கொள்கிறார் விஜய் ஆண்டனி. ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, விஜய் ஆண்டனியே இசையமைக்கிறார்.

அவருடைய ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. லொக்கேஷன் மற்றும் பிற நடிகர் – நடிகைகள் தேர்வில் மும்முரமாக இருக்கிறார் கிருத்திகா.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.