சற்றுமுன்

ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் (புத்தக விமர்சனம்)

கார்த்திகேயன் சுகதேவன்
புத்தக
நான் சமீபத்தில் வாசித்த புத்தகம், மேகா பதிப்பக வெளியீட்டில் அமிர்தம் சூர்யாவின், ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் என்ற காதலியக் கவிதைத் தொகுப்பு, அதைப் பற்றியதொரு சிறு பதிவே இது.
காதல் பற்றி எழுதாத இலக்கியவாதிகள் சிலரே இருப்பார்கள். காதலிக்கத் தெரிந்தவர்களோ ஆளரவமற்ற நிலவில்கூட தன் காதலின் தடம்தேடி முடிவற்ற நித்திய யாத்திரையை சுகமாய்த் தொடர்கிறார்கள். இங்கு அண்ணன் அமிர்தம் சூர்யாவின் பதிவுகள் காதலைப் பற்றிய அவரின் தேர்ந்த முகாந்திரங்களாய்… அவதானிப்புகளாய்… அர்த்த போஷாக்கு நிறைந்த வார்த்தைகளாயுள்ளது இந்த புத்தகத்தில்.
அத்தனையும் காதலை வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு அனுபவங்களோடு தரிசிக்கும் வெளிப்பாடு.இப்புத்தகத்தில் அமிர்தம் சூர்யாவை ஒரு தேர்ந்த காதல் பித்தனாகவே நான் பார்க்கிறேன்.எப்படி இத்தனை வயதிலும் இப்படிப்பட்ட கவிதைகளை இவரால் எழுதமுடிகிறது?. கேட்டால் உதைக்க வருவார்.

“அப்படி என்னடா எனக்கு வயசாயிடுச்சு...”என சற்றே கோபப்படுவார்.
காதலைப் பற்றி சிறுகுறிப்பு எழுதும் கவிதை ஒன்று இப்புத்தகத்தில் உள்ளது.
காதலென்றால் என்னவென்று கேட்கும் பிரம்மச்சாரி நாரதருக்கு அது
ஒழுங்கற்றதும் ஆனால் ஒழுங்கானதுமான
சப்த தாளத்தில் மூத்திரம் பெய்தபடி…
குறுக்காக சாலையைக் கடக்கும்
அந்த எருமையைப் போன்றது, என்கிறார் கிருஷ்ணர் (காதலைப் பற்றிச் சொல்ல முழுத்தகுதி படைத்த கடவுள்தான் இவர்).
அறவழிப் போராட்டமென்றால் என்ன?. மானுடம் வாழ வேண்டும். தான் சிந்திய ரத்தத்தை தனது கருத்துக்கு மாற்று கருத்து கொண்டவரும்கூட எவ்விதத்திலும் சிந்தவிட்டு விடாமல் தனது கருத்தை வலியுறுத்த வேண்டும். கத்தியின்றி, ரத்தமின்றி தனது உரிமையை போராடி நிலைநாட்ட வேண்டும் என்பன போன்றவைகளே அறவழிப் போராட்டம்.
இதை எப்படியெல்லாம் நடத்தலாமென்பதற்கு பல முறைகள் உள்ளது. இதற்கு மிக நீளமான பட்டியலே உள்ளது ( *  நிறைய தகவல்கள் வேண்டுவோர் இந்த இணையதள முகவரிக்குச் சென்று பாருங்கள் : http://www.aeinstein.org/nonviolentaction/198-methods-of-nonviolent-action ). இப்போராட்டத்திற்கு கடிதங்கள், விளம்பர சுவரொட்டிகள், ஒத்துழையாமை, உண்ணாவிரதம், இன்னும் எவ்வளவோ உள்ளது. அப்படித்தான் நரைகூடி கிழப்பருவமெய்தினாலும் நான் வீழ்ந்திடுவேனென்று எண்ணினாயோ என்று தன் சீரிய கவிதை வரிகளால் சுதந்திரப் போர் புரிந்தான் பாரதி.
ஆம். எழுத்திலும், கலை, இலக்கியத்தின் வழியிலும்கூட எத்தனையோ வீரர்கள் அன்று அப்போர் புரிந்தார்கள்.

அப்படிப்பட்ட ஒரு மாபெரும் யுத்தத்தைத்தான் நமது தமிழ் இளைஞர்கள் இன்று கையிலெடுத்துள்ளார்கள்.குமரி முதல் கூடிய இந்த அறப்போராட்டக் கூட்டம் தமிழகத்தின் எல்லையையும் தாண்டி புதுதில்லிவரைக்கும் கூட நீளுமென்ற அறிவிப்பை சொன்னதும் பல அரசியல்வா(வியா)திகள் ஆடிவிட்டர்களென்பது உண்மை.

கடல்கடந்தும் பல நாடுகளிலிருந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்த தமிழ்மக்கள் தங்களது உணர்வுபூர்வமான பதிவை ஊடகங்கள் வாயிலாகவும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் பதிவு செய்துள்ளார்கள். அரபு நாடுகள், அமெரிக்கா, இலங்கை, இங்கிலாந்து போன்ற இன்னும் பல நாடுகளில் இன உணர்வோடு இத்தமிழ் சமூகம் தங்கள் உணர்வை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய இனம் எங்கள் இனமென்று இவர்கள் (தமிழர்கள்) இறுமாப்புடன் சொல்ல, உலகமெங்கும் காட்டுமிராண்டிகளாக விரவிக்கிடந்த முதல் சமூகம் இத்தமிழ்சமூகமென சரித்திரமே சான்றளிக்கிறது. இதில் மனதை உருக்கும் விடயம் என்னவென்றால் காட்டுமிராண்டிகளாய்க் கிடந்தவர்களே தங்கள் போர்க்குணம் துறந்து அமைதிவழியில் அறப்போர் செய்வதுதான்.
நெஞ்சு நெகிழ்கிறது. சுற்றியிருந்து சாட்சி சொல்லும் வங்கக்கடலும் அலையெனத் திரண்ட தமிழ் உள்ளங்களின் கணக்கிலடங்கா கூட்டத்தை கண்டு மிரண்டு போகிறது. இனி, ஒவ்வொருமுறை மெரீனா செல்லும்போதும் “இங்குதானே அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறப்போராட்டம் நடந்ததென்றுதான்” ஒவ்வொரு மனிதனும்  நினைத்துப் பார்ப்பான்.
ஹென்றி டேவிட்,  மகாத்மா காந்தி, நெல்சன் மாண்டேலா, மார்ட்டின் லூதர்கிங், தலாய் லாமாவென இன்னும் பல தலைவர்கள் முன்னிருந்து நடத்திச் சென்றது இந்த அறவழிப்போராட்டம்.

அறவழியில் போராடி வெற்றிகண்ட பிற தேசங்கள் இவ்வழியை இந்தியாவில் மகாத்மா காந்தியிடமும், கோடிக்கணக்கான இந்திய சுதந்திரப் போராட்டக்காரர்களிடமிருந்தும் கற்றுக் கொண்டதாக நெகிழ்ந்து போய்ச் சொல்லுகின்றன.

ஆனால் சொல்லிக்கொடுத்த இந்த பூமியே அதை மதிக்கவில்லை. இன்னமும் உறக்கம் கலையாமல் மவுனம் சாதிக்கின்றது.
”கட்டுப்பாடற்ற உறவுகொள்ள விருப்பமுள்ளவர்கள் வரலாமென கூறினாலும் ஐம்பதினாயிரம் பேர் இந்த மெரீனாவில் கூடுவார்களெ”ன்று வெட்கமேயில்லாமல் கூறிய ஒரு மூதாட்டியின் நாகரீகமற்ற பேச்சைக் கேட்டும் அமைதியாகவுள்ளது. பிறகு பேசியதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்கிறது அம்மூதாட்டி.

’பனி சிந்தும் இரவுகளும், பசி கொடுத்த இன்னல்களும் துளியாய் மறைந்து போகும் வரும் தீர்ப்பினாலே’ என அமைதியாய் பொறுமையுடன் காத்திருக்கும் எம் மக்களுக்கு அவசர சட்டம் கொண்டுவர இவ்வளவு காலமா. ஏன்?. எதற்காக இந்த தாமதம்?. நிரந்தர தீர்வு எங்களுக்கு உடனே வேண்டும்.
அமைதியாக வாழும் எங்கள் பூமியில் குழப்பங்கள் விளைவித்த பீட்டா அமைப்பினரை அவர்களது நாடுகளில் அசைவ உணவுகளை எதிர்த்து வழக்குகள் போட அனுப்பி வைக்க வேண்டும் நமது அரசு. அதை விடுத்து இனியும் அவர்கள் இங்கு தங்களது இருப்பை தொடரக் கூடாதென்று வலியுறுத்த வேண்டும்.

ஆம். வந்தாரை வாழ வைப்பதுதான் தென்னகமெனினும், இதுவும் ஒருவகையில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் போலத்தான்.
அறப்போரினால் ஆவது ஒன்றுமில்லையென கோடியில் ஒருவர்கூட எண்ணிவிடாமலிருக்க உடனே இப்போராட்டம் வெற்றி பெற வேண்டும்.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை, சர்வேசா கண்ணீராலன்றோ காத்தோம் என பாரதி பாடிய பாடல் வரிகளின் அர்த்ததை மீண்டும் ஒருமுறை நம் இந்திய மக்கள் புரிந்து கொள்ளவொரு சந்தர்ப்பமாய் இதை மாற்றித் தர வேண்டும். அறவழியில் நின்று அன்று நம் தேசம் கடந்துவந்த பாதைகளுக்கு மதிப்பளிக்க இப்போராட்டத்துக்கு உடனே வெற்றியை உறுதி செய்யவேண்டும். அது வரக்கூடிய நமது குடியரசு தினத்தில் நம் உன்னத தலைவர்களுக்கும்  நமது சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் நாம் செலுத்தும் மரியாதையே.
அப்படிச் செய்வதால், ரூபாய் நோட்டுகளில் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்தியனது உள்ளத்திலும் காந்தி உண்மையாக மனம்விட்டு சிரிப்பார். அவரை சிரிக்கவிடுங்கள்


எதையும் திட்டமிடாமல் சிவனேயென செல்லும் எருமையைப் போல காதல் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி, திட்டமிடலுமின்றி வெயிலோ, மழையோ… அதை சுகமாக அனுபவித்தபடிதான் வேறு எந்தவித சுற்றுப்புற சல,சலப்புகளுக்கும் சலனமில்லாது நகர்கிறது.
எடுத்தலோ, கொடுத்தலோ அதை புரியாமலும் புரிதலோடு கொண்டாட வேண்டும்.
அதை காதல்மொழி எப்படியிருக்கும் என்ற கேள்வியில் நாரதருக்கு பதிலாகச் சொல்கிறார் கிருஷ்ணர்.
சரியான சொல்லையும் சரிபோலதோணும் தப்பான சொல்லையும் சேர்த்தே காதல்மொழி இருக்கும் என்று.

உண்மைதான். அப்பாவிக் குழந்தைகளின் ஆதர்ஷ மொழிதான் காதல்.தப்பும், தவறுமாய் தாளமிட்டபடி நடைபயிலும் கிள்ளைதான் காதல்நுழைந்து. காதலை குழைத்துத் தரும் அந்த எருமை. காமம் அதன் அதீத பசிக்கான தாய்ப்பால். காதலில் காமம் உண்டு. காதலில்லாத காமத்தால் தாசி அம்மனின் நிர்வாண தரிசனம் கிடைக்காதென்று தாசி அம்மன் குறித்த கவிதையில் கவிஞர் சொல்கிறார். அக்கவிதைக்கு கவிஞர் மனுஷ்யபுத்திரன் கொடுத்திருக்கும் விளக்கம் கவிதைக்குள்ளொரு கவிதை.
பெண்பித்தன் எவனும் தான் இழந்த ஒரு பெண்ணைத் தேடித்தான் ஒவ்வொரு கதவாகத் தட்டுகிறான். அந்தப் பெண் அவனுக்குள் உறங்குகிறாள். அவளது உறக்கம் கலையாதவரை எந்தக் கதவும் அவனுக்குத் திறக்கப் போவதில்லை என தனது முன்னுரையாக கவிஞர் மனுஷ்யபுத்திரன் தந்துள்ளார். அவரும் அண்ணன் அமிர்தம் சூர்யாவைப் போல அதிகமாக முக்குளித்தவராகத்தான் இருக்க வேண்டும். குளிர் நீரோடையின் கத கதப்பிலிருக்கும் இவ்வகை காதலின் ஆன்மாக்களை
கூழாங்கற்களின் மேல் பயணித்து
தன்னை
சுத்திகரித்துக் கொண்ட
தெளிந்த குளிர் நீரோடையாய்
அவர்கள் நிச்சயம்
திரும்பக் கூடும் தத்தமது இல்லம் நோக்கி,
அல்லது தன்மீதே தன்னைச் சுற்றிக் கூடுகட்டிக்கொள்ளலாம் – பட்டுப்பூச்சிக்கான தொடக்கமாய் என்கிறார்.
எதுவாயிருந்தாலும்
நீங்கள் காத்திருந்தால்தான்
அவதானிக்கமுடியும்
- என்றும் சொல்கிறார். காதலில் மடத்தனம் எவ்வளவு மாண்புமிக்கதோ அவ்வளவு மகத்தானதாக கொண்டாடப்படுகிறது காத்திருத்தல்.
அப்படித்தான் ஒரு கவிதை. அன்னத்தின் மேல் காதல் கொண்ட களிறு ஒன்று, அந்த அன்னம் நீந்தும் குளத்தினுள் நீருக்கடியில் மூழ்கிக்கொண்டு அந்த அன்னத்தைப் போலவே தன் துதிக்கையை வளைத்து அந்த அன்னத்தின் கவனம் தன் மீது திரும்ப காத்துக் கிடக்கிறது. அப்போது அது,
மூழ்கி மூழ்கி நின்வடிவம் தாங்கி
உன்னை கொஞ்சும் தருணங்களில்
வெட்கத்தில் கவிழ்ந்த உன் கயல்பார்வையில்
என் ஆதிவடிவம் அகப்பட்டு
பொருந்தா இனமென புறந்தள்ளுவாயோ?
பொங்குபால் நுரையென
புசுபுசுக்கும் சிறகுக்காரி
அறிவாயோ நீ...
வடிவத்தில் இல்லை வலிய காதல் என்று...
நின் பாதரேகை உழுத இந்த
திரவ பூதத்தில் நீர்சமாதியாக்குமோ
உன் அகத்தில்
நெடுஞ்சாண்கிடையாய்
விழுந்த இந்தக் களிறின் காதல்
மீன்குஞ்சுகள் நகைத்துக் கொறிக்கும்படி என்காதலை
நதியில் வீசாதே அன்னமே எனத்தான் பிளிறுகிறது.
பொருந்தாக் காதலில்கூட காத்திருத்தல் எவ்வளவு சுகமாயிருக்குமென சொல்லிவிடுகிறது இந்தக் கவிதை.
காதலியை
அடர்வனமாய், பாலையாய், கடலாய்
ஏணியாய், பாறையாய், பாம்பாய்...
அவளின் முழு ரூபத்தை பிறர்க்கு
அறிமுகப்படுத்த முனைகையில்
பாதங்களில் நிழலாய் மாறிப்
பதுங்கி ஒளிர்கிறாள்
இருளின் பிரகாசமாய்...
இருளை குறந்த ஒளியென்றான் பாரதி. இருளின் பிரகாசமாக காதலியைக் கொண்டாடும் இந்த பித்தனை காதலை சற்றேனும் ருசித்திருந்தாலே போதும். எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.
இது இப்படியென்றால்,
சாகாமல் இருக்கவேண்டுமானல்
அவளாக மாறிப் போ...
நீ என்கிறார் இன்னொரு கவிதையில்.
அந்த குப்பைக்காரியின்
தோளில் தொங்கும் கோணிப்பையில்
அவளின் அன்றைய ஜீவிதத்துக்கு உதவும்
சடப்பொருளாய் நானிருப்பதில்
எனக்குத் துளியும் சங்கடம் ஏதுமில்லை
ஈசனே என்கிறார் இதுவும் காதல்தானென்ற கவிதையில்.
காதலுக்காகவும், காதலிக்காகவும் எதையும் கொடுக்க காத்திருக்கும் இக்காதலைச் சொல்லியுள்ள இவரது புத்தகம் காதல் செய்யும் ஒவ்வொருவருக்கும் அவசியத் தேவையான காதலின் ஆயுள் காப்பீடாகக் கூடச் சொல்லலாம்.
ஆம்!. காதலை எதிர்க்கும் காதலியின் உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் காதல் சாம்ராஜ்யத்தின் பரிபூரண அன்பை தரிசிக்க இந்த புத்தகத்தை வாங்கி அவர்களுக்கு பரிசலிக்கலாம்.
உடனே அவர்கள் உங்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிடுவார்கள்.ஆம். காதல் இவ்வளவும் செய்யுமா என கட்டை பிரம்மச்சாரி நாரதரையே கிருஷ்ணரிடம் விளக்கம் கேட்க வைத்து விட்டதே.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.