சற்றுமுன்

சத்து மாவு

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெருகி வருகிற இன்றைய சூழ்நிலையில் எனர்ஜி டிரின்க் என்று கடைகளில் வியாபார நோக்கில், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பொருட்களின் மோகமும் இன்னும் குறையவில்லை. விளம்பர மோகத்தால் நீங்கள் வாங்கி குடிக்கும் இத்தகைய மாவு பொருட்களில் சத்து இருக்கி்றதா, இதை குடிப்பவர்கள் நோயில்லாமல் இருக்கின்றார்களா, தேவையான உடல் வலிமையுடனும், மன உறுதியுடனும் இருக்கின்றார்களா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை என்பது தான் உண்மை.
அது மட்டுமல்லாமல் இவ்வகையான பவுடர்களில் அதிகப்படியான இனிப்புகளும், பல விதமான கெமிக்கல்ஸ் மற்றும் செயற்கையான வைட்டமின்ஸ், மினரல்ஸ்களும் கலக்கப்பட்டிருக்கும். மேலும் இது குறிப்பிட்ட காலம் வரை கெடாமல் இருக்க மருந்துகளும் கலக்கப்பட்டிருக்கும். எனவே இப்படிபட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மாவுகளை தவிர்த்து நீங்களே வீட்டில் சத்து மாவு தாயாரித்து பயன்படுத்துவது எப்படி என்று பார்போம்.
👉 தேவையான பொருட்கள்.
சிவப்பு அரிசி - 100g
பார்லி - 100g
பொட்டுக்கடலை - 100g
பாசிப்பயறு - 100g
முழு உளுத்தம் பருப்பு -100g
(தோல் நீக்கியது)
தீட்டப்படாத கோதுமை -100g
கேழ்வரகு - 100g
கம்பு -100g
கொள்ளு -100g
தினை அரிசி -100g
நிலக்கடலை -100g
சாதா வெள்ளை அவல் -100g
ஜவ்வரிசி - 50g
குதிரைவாலி - 50g
வெள்ளை எள் - 50g
பெரும்பயறு - 50g
சோயா - 50g
சோளம் - 50g
பாதாம் - 50g
பிஸ்தா - 50g
முந்திரி - 50g
சாரப்பருப்பு - 50g
ஓமம் - 30
தோல்நீக்கிய சுக்கு - 30g
ஏலக்காய் -10g
ஜாதிக்காய் - 2
மாசிக்காய் - 2
👉 !செய்முறை!
கேழ்வரகு, சோளம், கம்பு, பாசிப்பயறு, உளுத்தம் பருப்பு, கொள்ளு, பெரும்பயறு, ஆகியவற்றை தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்து பிறகு
தண்ணீரை நன்றாக வடித்து அதை தனித்தனியாக ஒரு சுத்தமான துணியில் கட்டி வைத்து சுமார் 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை நிழலில் உலர்த்தி காய வைக்க வேண்டும்.
பிறகு அனைத்து தானியங்களையும் கருகாமல் வறுத்து மொத்தமாக அரைத்து பத்திரப்படுத்தி வைத்து தேவைகேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தானியங்களை முலைகட்டாமல் கூட அரைக்கலாம். ஆனால் முலைகட்டிய தானியங்களில் மூன்று மடங்கு சக்தி அதிகமாக இருக்கும். பொருட்கள் குறைவாக இருந்தால் மிக்ஸிலும், அதிகமாக இருந்தால் மாவு மில்லிலும் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். அதிகம் தேவைப்படுவோர் தானியங்களின் அளவை இருமடங்காக சேர்த்துக் கொள்ளலாம்.
👉 இந்த சத்துமாவை தேவைக்கேற்ப வெண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஞ்சி போல் காய்ச்சி, இனிப்புக்காக நாட்டு சக்கரை அல்லது பணைவெள்ளம் சேர்த்து சாப்பிடலாம். பாலுக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
👉 உடல் பருமன் உள்ளவர்கள் தேங்காய் பால் தவிர்த்து கொள்ளவும். சத்துமாவை இரவில் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தேங்காய் பாலை தவிர்த்து விடுங்கள்.
👉 நீரிழிவு நோய் உள்ளவர்கள் இனிப்பையும், தேங்காய் பாலையும் தவிர்த்து, வெங்காயம், மிளகு, ஜீரகம், இஞ்சி, மோர் சேர்த்து, தாலித்து சாப்பிடலாம். இந்த சத்துமாவை தோசை, அடையாகவும் செய்து சாப்பிடலாம்.
👉 குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் இதை காலை, மாலை கொடுத்து வந்தால், அவர்களுக்கு தேவையான சத்தும், ஆற்றலும் கிடைக்கும். மேலும் அவர்களின் மன வலிமையும், ஞாபக சக்தியும் கூடும். சீரான உடல் வளர்ச்சியும் இருக்கும்.
👉 கர்பினி பெண்கள் தினந்தோறும் இதை குடித்து வந்தால் அவர்கள் உடலுக்கு இரும்புச் சத்து, கால்சியம், புரதம் போன்ற தேவையான சத்துகள் கிடைக்கிறது.
👉 சத்துமாவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.
👉 இந்த தானிய வகைகளில் கூடுதல் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் உணவு மெதுவாக ஜீரணம் ஆகும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
👉 இந்த சத்துமாவு முதியோர்களுக்கும், நோயாளிகளுக்கும் இலகுவாக ஜீரணமாகி தேவையான சக்தியை கொடுக்கக்கூடிய ஒரு முழுமையான உணவாகும்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.